தொடரும் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் , காளையார்கோயிலில் பதற்றம்

0
124
சிசிடிவி காட்சி புகைப்படங்கள்

காளையார்கோயிலில் தொடரும் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம். கொள்ளையர்கள் கைது செய்யப்படாததால் பொது மக்கள் அச்சம். CCTV காட்சி வைரல்…

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கேகே நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள்  ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் என்பவரின் வீட்டில் கடந்த மாதம் இரவில் காம்பவுண்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்  செல்வராஜை  தாக்கி  வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் செல்வராஜ் கூச்சலிடவே   பொதுமக்கள் கூடியதைக் கண்ட கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக அப்பகுதிக்கு நேற்று இரவு காரில் வந்த கொள்ளையர்கள் காளையார் கோயில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் காமராஜ் என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்ததால், மீண்டும் தொழில் அதிபர் செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்து சிசிடிவி கேமராக்களின் வயர்களை துண்டித்துவிட்டு கொள்ளையர்கள் செல்வராஜின் கையில் அருவாளால் வெட்டிவிட்டு  கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர்.

செல்வராஜ் அவரது மனைவி விஜயா கூச்சலிடவே ஊர் கிராம மக்கள் கூடியதால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தொழிலதிபர் செல்வராஜ் காளையார்கோவில் காவல் நிலையத்தில் CCTV காட்சிகளுடன் புகார் அளித்து உள்ளார்.

ஆனால் இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை மேலும் இரவில் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

நள்ளிரவில் வீடுபுகுந்து தாக்கிய முகமூடி கொள்ளை கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் SP அலுவலகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடந்த திட்டமிட்டுள்ளனர்.

காளையார் கோவில் காவல்துறையினர் முகமூடி கொல்லையர்களை பிடித்து மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய  வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here