டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

0
158
டிஜிட்டல் இந்தியா

 திருச்சி ஐ.ஐ.எம். நிறுவனத்தில் தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது. தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகில் தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்குவதற்கு தேவைப்படும் புதிய திறன்கள் மற்றும் பரிணாமங்கள் குறித்த கருப்பொருளில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பேசினார்.  

மோடி ரவி

அப்போது அவர் கூறியதாவது, சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்தியாவில் ஊழல் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றடைகிறது. மீதமுள்ள, 85 பைசாவை ஊழல் செய்கிறார்கள். இதற்கான தீர்வாக, ‘டிஜிட்டல் இந்தியா’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 56 சதவீதம் பெண்கள் இருக்கிறார்கள்.  

ஆளுநர்

இதனால் இவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால் இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை. சமீபத்தில் நடைபெற நிகழ்வில் தமிழகத்தில் பள்ளிக்கல்வி படிக்கும் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு மாணவன், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இதனால், பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அந்த மாணவனை நான் பாராட்டினேன். முத்ரா திட்டத்தின் மூலம் பலரும் தொழில் தொடங்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பாடு அடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here