எதிர்நீச்சல் மாரிமுத்து மாரடைப்பால் மரணம் – டிடிவி, உதயநிதி இரங்கல்

0
100
மாரிமுத்து

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்ததற்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில்,”திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

மாரிமுத்து பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி தனது ட்விட்டர் பதிவில்,”திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள்,  திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here