கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில்
எல்ஜிஎம்(LGM) படக்குழுவின் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா ஆகியோர் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்,
கோவையில் வருவது மிகப்பெரிய சந்தோஷம் எங்களுடைய படம் இங்கே வெளியாகி உள்ளது.தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களிலும் குடும்பங்கள் அனைவரும் இந்த படத்தை மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர்.நல்ல நல்ல கருத்துக்கள் வருகிறது. கோவை பொறுத்த வரை அன்பானவர்கள் என தெரிவித்தார்.
படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள்,பொதுமக்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகிறது.தோனி படம் என்பதால் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் என அவர்களது டீம் கூறினார்கள்.நாங்கள் இந்த படத்தில் நடித்தது வெற்றியாக பார்க்கிறோம்.இவனா நதியா கெமிஸ்ட்ரி முழுமையாக உள்ளது என பொது மக்களிடம் கருத்துகள் வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகை இவானா,நாங்களும் ரசிகர்களுடன் படம் பார்த்தோம் படம் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளது என தெரிவித்தார்.