மும்பையில் கனமழை பெய்து வருவதாலும் , கனமழை இரண்டு நாட்களுக்கு தொடரும் என்பதனாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மும்பையை புயல் எச்சரிக்கையை ஆரஞ்சு நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது.
கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வியாழக்கிழமை மூடப்பட்டன மற்றும் மும்பை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன .
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 115.58 செ.மீ., மிக கனமழை பெய்துள்ளது.
ஜூலை 26-30 முதல் மகாராஷ்டிராவின் கடலோரக் கோட்டிற்கு அப்பால் காற்றின் வேகம் மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் மற்றும் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது , மேற்குறிப்பிட்ட காலத்தில் மீனவர்கள் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் .
இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான பால்கர், தானே மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. புனே, சதாரா மற்றும் ரத்னகிரிக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவமழையுடன், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் காற்றின் வேகம் வலுப்பெற்று கனமழை பெய்து வருகிறது.
நாள் முழுவதும் பெய்த கனமழைக்குப் பிறகு, மும்பை புதன் கிழமையன்று, இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் 1557.8 மிமீ மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,502 மிமீ மழை பதிவாகியிருந்தது IMDயின் சான்டாக்ரூஸ் ஆய்வகத்தால் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் வியாழனன்று, தண்ணீர் தேங்குவதைக் கட்டுப்படுத்த, நகரம் முழுவதும் 477 பம்புகளை நிறுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நகர் பகுதியில் 187 பம்புகளும், கிழக்கு புறநகர் பகுதியில் 124 மற்றும் மேற்கு புறநகர் பகுதியில் 166 பம்புகளும் பொருத்தப்பட்டுள்ளன .
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் வியாழக்கிழமை கீழ்காணும் சாலை பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது, அவை *வாகனங்கள் பழுதடைவதைத் தடுக்க, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும் , வழுக்கும் சாலைகளில் கவனமாக இருங்கள், வாகனங்களை மெதுவாக ஓட்டவும் மற்றும் பிற வாகனங்களிலிருந்து
மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க தூரத்தை பராமரிக்கவும் மற்றும் சுமூகமான போக்குவரத்து ஓட்டத்திற்கு போக்குவரத்து திசைதிருப்பல் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .