கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறையில் சிறிய குற்றங்களை செய்யும் இளைஞர்களின் பற்களை பிடுங்கி நூதன தண்டனை கொடுத்த கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை .
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளராக இருப்பவர் பல் பீர் சிங். இவர் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களை செய்யும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது பற்களை பிடுங்கித் தண்டனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதே போல் அந்த பகுதியில் சுமார் பத்து இளைஞர்களை இவர் தண்டனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபரை அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்சனையை செய்ததன் காரணமாக அவரை ஏ எஸ் பி அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அவனது பற்களை துடிதுடிக்க பிடுங்கி எடுத்துள்ளார் .
இதே போல் அந்த பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களின் பற்களை உடைத்து அவர்களது கையில் கொடுத்துள்ளார் .
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தற்போது குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி அவர்களது பற்களையும் உடைத்து உள்ளார்.
அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும் சில இளைஞர்களை பற்களை உடைத்து அவரது வாயில் ஜல்லிகற்களை போட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது
டாக்டரை பற்களை பிடுங்குவதற்கு பயப்படுவார்கள் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற சட்டம் உடைய சவூதி அரேபியா நாட்டில் கூட இத்தகைய கொடுமை நடைபெறவில்லை
தற்போது ஐபிஎஸ் படித்த இவர் காட்டுமிராண்டித்தனமாக மனிதநேயம் மற்றும் முறையில் கொடூரமான குற்றவாளி இல்லாத சாதாரணமான வழக்குகளில் ஈடுபட்டவர்களை கூட கடுமையாக அவரை தண்டனை வழங்கி வருகிறார்
இது மனித குலத்திற்கு எதிரானது இவர் போன்ற அதிகாரிகள் காவல்துறையில் வேலை செய்தால் மக்கள் காவல் நிலையத்திற்கு வரவே அச்சப்படுவார்கள்.
ஆகவே இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் இவரது அத்துமீறல்கள் குறித்த செய்தி , காட்டு தீபோல் பரவியதை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துளார் .