தோனி – பண்ட் சந்திப்பு.. CSk என்ன செய்யப் போகுது? UPDATE கொடுத …

The News Collect
2 Min Read
  • சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட்டை வாங்கும் என சுரேஷ் ரெய்னா சூசகமாக கூறி இருக்கிறார். தோனியும், ரிஷப் பண்ட்டும் சமீபத்தில் டெல்லியில் சந்தித்ததாகவும், அப்போது தானும் உடன் இருந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார், இதன் மூலம் ரிஷப் பண்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர விரும்புவது தெரிய வந்துள்ளது.

எனினும், ஏலத்தில் சிஎஸ்கே அணியால் ரிஷப் பண்ட்டை வாங்க முடியுமா? அதற்குரிய தொகை கை இருப்பில் இருக்குமா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்க வைத்து இருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிரானா, தோனி ஆகிய ஐந்து வீரர்களை சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது. இந்த ஐந்து வீரர்களை தக்க வைக்க அளிக்கப்பட்ட சம்பளம் போக, அந்த அணியின் வீரர்களுக்கான சம்பள கையிருப்பில் தற்போது 55 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது.

இந்த தொகையை வைத்து சிஎஸ்கே அணி தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டும். ஒரு வேளை ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 15 கோடியாவது அவருக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

பல அணிகளும் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் வாங்க போட்டி போடும். அந்த அணிகளுடன் சிஎஸ்கே அணியால் போட்டி போட்டு அவரை வாங்க முடியுமா? என்பதே போல கேள்வியாக உள்ளது. சிஎஸ்கே அணிக்கு தற்போது ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவையாக உள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/500-tons-of-garbage-collected-on-diwali-in-thanjavur-were-removed-by-the-municipal-cleaning-staff/

தோனியால் 2025 ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பிங் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. அவர் இம்பேக்ட் வீரராக பேட்டிங்கில் மட்டுமே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ரிஷப் பண்ட், சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டால் அந்த அணியின் இன்றியமையாத வீரராக இருப்பார்.

Share This Article
Leave a review