சென்னை: நவ கிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். செப்டம்பர் 04ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்வார் குரு பகவான்.
குருவின் வக்ர சஞ்சாரத்தினால் ஆவணி மாதம் முதல் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
குரு வக்ர பெயர்ச்சி:
நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். குரு பகவான் மேஷ ராசியில் பரணி, அஸ்வினி நட்சத்திரங்களில் வக்ரமடைவார். டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருவின் இந்த பயணத்தினால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் ஏற்படும் என்று பார்க்கலாம்.
சிம்மம்:
பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் குரு பகவான். சிம்ம ராசிக்காரர்களுக்கு புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும். புது வேலை கிடைக்கும். உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்க. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கன்னி:
உங்களுக்கு அஷ்டமத்து குரு என்றாலும் கவலை வேண்டாம். குரு பகவான் பார்வை 2ஆம் வீட்டின் மீது விழுவதால் திருமணம் உள்ளிட்ட தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
துலாம்:
குரு உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் வக்ரநிலையில் பயணம் செய்கிறார். சிலருக்கு திடீர் பணவரவு வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏழாம் வீட்டில் இருந்து குரு உங்கள் ராசியை பார்த்தாலும் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்:
ஆறாம் வீட்டில் குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்வதால் தடைபட்டு வந்த சுப காரியங்கள் மளமளவென நிறைவடையும்,
சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகள் இன்றி நிறைவேறும். எதிலும் எச்சரிக்கை தேவை. பேச்சில் கவனம் தேவை. ஆரோக்கிய
குறைபாடு வரும் மருத்து செலவு செய்து பாக்கெட் காலியாகி விடும்.