- தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு தஞ்சை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் நிகழ்வாக
தஞ்சை ஆற்று பாலம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முரசொலி செல்வம் படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இதனை தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாக தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் கலைஞர் நூலகம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

நாடாளுமன்ற அலுவலகம் இருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியை அமர வைத்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீணை பரிசாக வழங்கினார்
இந்நிகழ்வில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மக்களவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
திமுக கூட்டணி எப்பொழுது பிளவுபடும் என அதிமுகவும் பாஜகவும் துண்டு போட்டு காத்திருக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது – உதயநிதி ஸ்டாலின்

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/ind-vs-sa-1st-t20-playing-xi-suryakumar-yadav-who-is-going-to-kill-the-young-bowler/
திமுகவை அழிப்பேன் என பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – உதயநிதி ஸ்டாலின்
ஒரு கோடியை 16 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது – உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது எந்த பிரிவும் இல்லை ஏழாவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் – உதயநிதி ஸ்டாலின்