நீட் தேர்வு ரத்து செய்ய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்தும் திமுக உண்ணாவிரதம்

0
142
சென்னையில் உண்ணாவிரதம்

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. நீட் தோ்வை தடை செய்யாத ஒன்றிய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் இன்று உண்ணாவிரதம் நடக்கவுள்ள நிலையில் மதுரையில் மாற்றப்பட்டுள்ளது. அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நாளை நடைபெற இருந்த திமுக உண்ணாவிரதம் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது. எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால், ஜனநாயகத்தைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்படுவதாக திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி அறிவித்துள்ளது.

அதேபோன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே திமுக மருத்துவரணி, இளைஞர் அணி, மாணவர் அணி உண்ணாவிரத போராட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன்எம்.எல்.ஏ. தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம் எல் ஏ முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட பந்தலில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட  மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்கள் டாக்டர்கள் அஸ்வின், ஸ்டாலின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் அருண் ராஜ்,தாக பிள்ளை மாணவர் அணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் முன்னிலையில் பங்கேற்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here