தமிழகத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்த சனாதானம் குறித்து அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார், அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூபாய் 10 கோடி எனவும் அவரது புகைப்படத்தை வாளால் குத்தி கிழித்தும் தீ வைத்து கொளுத்திய வட மாநில சாமியார் பரகாம்ச ஆச்சாரியா.
இதை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இதையடுத்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் நவநீதன் கிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் சாமியார் புகைப்படத்திற்கு செருப்பால் அடித்து தீ வைத்தனர். சாமியாருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
கோவை தெற்கு மாவட்ட டன் இளைஞரணி சார்பாக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் தலைமையில்காந்தி சிலை அருகே சாமியார் உருவ பொம்மைக்கு தீ வைத்து முழக்கங்கள் எழுப்பினர்,திடீரென திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.