சுதந்திர தின விழாவில் கோவை விஜய் இயக்கத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா ?

0
194
கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்துள்ள இந்த செயல் , தமிழக மக்களிடையே விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதத்தை சற்றே சூடுபிடிக்க செய்துள்ளது . .

இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருவது அனைவருக்கும் அறிந்த செய்தி தான் .

ஆனால் கோவை சுந்தரபுரம் பகுதியில் விஜய் ரசிகர்கள் அனுசரித்த சுதந்திர தின விழா சற்றே வித்தியாசமானது . அவர்களின் இந்த செயல் சமூக பொறுப்போடு சேர்த்து அனைவரும் ஒன்றே என்னும் நமது தேசிய ஒருமைப்பாட்டை அனைவரிடத்திலும் கொண்டுபோய் சேர்க்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது   .

அப்படி என்னதான் செய்தார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர் ?

கோவையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தூய்மை பணியாளர்களை அழைத்து கௌரவித்தனர்.பின்னர் அவர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

பொதுவாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் உயர் அதிகாரிகள்,அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்வுக்கு மாறாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை  கொடியேற்ற வைத்த இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும்  பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே வலுத்துவரும் நிலையில் , கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்துள்ள இந்த செயல் , தமிழக மக்களிடையே விஜயின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது அரசியல் எண்டரி எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு  மேலும் வலுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here