எலக்ட்ரல் வாக்குகள் என்றால் தெரியுமா ? அமெரிக்க அதிபர் …

The News Collect
2 Min Read

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. அங்கே அதிக அளவில் எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார். அது என்ன எலக்ட்ரல் காலேஜ் வாக்குகள்.. அது எப்படி பதிவு ஆகும்.. எப்படி எண்ணப்படும் என்று பார்க்கலாம்.

- Advertisement -
Ad imageAd image

1. அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும்

2. அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும்.

3. அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

4. உடனே உங்களுக்கு கேள்வி வரலாம்.. இந்த எலக்டர்ஸ் வாக்குகள் எப்படி மாகாணம் வாரியாக பிரிக்கப்படும் என்று. இதற்கு சில காரணிகள் உள்ளன.. அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திற்கு சம பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. கறுப்பின மக்கள்.. அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடாது என்பதற்காக இந்த எலக்ட்ரல் வாக்கு முறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.

5. மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும். உதாரணமாக ஒரு மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களுக்கே.. மொத்தமாக அந்த மாகாணத்தின் எல்லா எலக்ட்ரல் வாக்குகளும் வழங்கப்படும்.

6. உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் யாருக்கும் அதிகமான மக்கள் வாக்கு கிடைக்கிறதோ.. அவர்களுக்கே அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அப்படியே வழங்கப்படும். அதாவது ஒரு மாகாணத்தில் மெஜாரிட்டி வாக்குகளை பெறும் வேட்பாளர் அந்த மாகாணத்தின் மொத்த எலக்ட்ரல் வாக்குகளையும் பெறுவார். இதன் காரணமாக தேசிய அளவில் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் கூட.. வெற்றிபெற முடியும். அதாவது மெஜாரிட்டி மாகாணங்களில் எலக்ட்ரல் வாக்குகளை அள்ளினால் போதும்.. 270 எலக்ட்ரல் வாக்குகளை அள்ளினால் போதும் தேர்தலில் வெற்றிபெற முடியும்.

7. உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 55 எலக்டர்ஸ் உள்ளனர். அதிக எலக்ட்ரல் வாக்காளர்கள் உள்ள மாகாணங்களில் இதுவும் ஒன்று. இங்கே எலக்டர்ஸ் வாக்கு யாருக்கு செல்கிறதோ.. அவர்களுக்கு தேர்தலில் சாதகமான சூழல் ஏற்படும். பொதுவாக கலிபோரியாவில் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/a-bridge-constructed-at-a-cost-of-146-crore-rupees-in-the-cauvery-arasalar-barrage-area-near-papanasam/

8. மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார்.

9. உதாரணமாக கடந்த 5 தேர்தலில் 2ல் வெற்றிபெற்ற அதிபர்கள் மொத்தமாக மக்கள் வாக்குகளை கணக்கில் கொண்டால்.. குறைந்த மக்கள் வாக்குகளை பெற்று.. ஆனால் அதிக எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற்றவர்கள். 2016ல் டிரம்பிற்கு ஹிலாரியை விட 3 மில்லியன் மக்கள் வாக்கு குறைவாக இருந்தது.. ஆனாலும் எலக்ட்ரல் வாக்கு அதிகமாக இருந்ததால் டிரம்ப் வெற்றிபெற்றார்.

Share This Article
Leave a review