பங்குத்தொகை பல கோடி ரூபாய் மோசடி செய்த மர்ஜுக் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகை

0
93
பணம் இழந்தவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மர்ஜுக் அலி. இவர் மர்ஜுக் ட்ரான்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்தி அதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை பங்குத்தொகை வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி சுற்றுவட்டாராக பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர்கள் ஒரு லட்சம் முதல் 30 லட்சம் வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் முதலீடு தொகைக்கு முறையான பங்குத்தொகை வழங்கி வந்த மர்ஜுக் அலி, கொரோனா காலத்திற்குப் பிறகு பங்குத் தொகையை சரியாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலீடு செய்தவர்கள் பங்குத்தொகை மற்றும் முதலீடு தொகையை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அவர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக முதலீடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் புகார் அளித்து இதுவரை காவல்துறையினர் மர்ஜுக் அலியை இதுவரை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டி இன்று தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டு  கூறுகையில், டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பங்கு தருவதாக கூறி எங்களிடம் விளம்பரம் செய்தார். அதனை நம்பி நாங்களும் ஒரு லட்சம் முதல் 30 லட்சம் வரை அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தோம். ஆனால் அவர் கூறியது போல பங்குத் தொகை தரவில்லை. ஓராண்டு மட்டுமே பங்கு தொகையை தந்து விட்டு ஏமாற்றி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இதுவரை அவரை கைது செய்யவில்லை. தலைமறைவாக உள்ள அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here