இந்தியாவின் உயர் பாதுகாப்பு பகுதிகளில் ஒன்று பாராளுமன்றம். ஆனால் அந்த பாதுகாப்பு கூட தற்போது கேள்விக்குறியாகி இருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
டிசம்பர் 13, 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற கட்டிடத்தின் மீதான தாக்குதலுக்கு ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு சம்பவம் எதை நோக்கி செல்லுகிறது இந்தியா.

2001 ம் ஆண்டு ஒரு அம்பாசிடர் காரில் வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அத்வானி பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது முகமது என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார்.
அதே நாளில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் பாராளுமன்றத்தில் நடந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம் யார் பின்புலம் என்று பாஜக அறிவிக்குமா?
இரண்டு இளைஞர்கள் பாராளுமன்றத்தின் உள்ளே புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
யார் இந்த மனோரஞ்சன்? மைசூரில் உள்ள அவர் எதற்காக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா அலுவலகத்தில் இருந்து தான் அனுமதி சீட்டை பெற்றுள்ளார். பாஜக எம்பி க்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. விவசாயம் செய்து வந்த பொறியியல் பட்டதாரியான மனோரஞ்சன் பாராளுமன்றம் நோக்கி தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க காரணம் என்ன?

தன் மகன் தவறு செய்யமாட்டான் என்று மனோரஞ்சனின் தந்தை உறுதியாக சொல்லுவதின் பின்னணி என்ன? இல்லை இதுவெல்லாம் எதிர் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அனுதாப அலை தேடுகிற சம்பவமா? திடமாக விளக்க வேண்டும் பிரதமர். இனியும் மௌனம் காத்தால் மக்கள் நம்ப மாட்டார்கள் நரேந்திர மோடியை.
ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்