’எல்லோரும் இறந்து போனதற்குச் சமம்’ – சொல்கிறார் அன்வர் ராஜா.!

0
171
அன்வர் ராஜா

சென்னை: கட்சித்தலைமையுடன் இணைந்து செயல்படத் தெரிந்தால் அவன் உயிர்வாழ்வான். தலைமையோடு இணைந்து செயல்படவில்லை என்றால் அவன் செத்தாருள் வைக்கப்படும்
என்று திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார் என்று அன்வர் ராஜா கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இன்று அதிமுகவில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜா, செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓராண்டுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்.
கட்சி விதிகளின் படி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து திருக்குறள் ஒன்றிணையும் கூறினார்.

“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்
மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்” 
என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். மிகப்பெரிய குழுமத்தில் குழுவோடு இருக்கிற ஒருவன் அந்த குழுமத்தின் தலைமையோடு ஒத்துப்போகத் தெரிந்தால் அவன் உயிர்வாழ்வான். தலைமையோடு இணைந்து செயல்படவில்லை என்றால் அவன் செத்தாருள் வைக்கப்படும் என்று திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். யார் யார் இறந்து விட்டார்கள் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்று திருவள்ளுவர் ஒரு கணக்கு எடுக்கிற போது, தலைமையோடு ஒத்துப்போகத் தெரியாதவன் அத்தனை பேரும் உயிர் வாழ்ந்தவன் பட்டியலில் இல்லை. இது ஒரு மபெரும் இயக்கம் என்று அன்வர் ராஜா கூறினார்.
என்னதான் அன்வர் ராஜா, திருக்குறளை சொல்லி அதற்கு விளக்கம் சொன்னாலும் அவர் கட்சித்தலைமையுடன் ஒத்துப்போகத் தெரியாதவர்கள் செத்துப்போனதற்கு சமம் என்று யாரை சொல்லியிருக்கிறார் என்று பலவித கருத்துக்கள் அடிபடுகின்றன.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், சசிகலா பக்கம் இருந்த அன்வர் ராஜா. பிறகு சசிகலா சிறைக்குப் போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். இஸ்லாமியர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சிஏஏ உள்ளிட்ட சட்டங்களை அதிமுக ஆதரித்து வாக்களித்ததால் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் அன்வர் ராஜா. கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் அன்வர் ராஜா. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றும் கூறி வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதையடுத்து கட்சியில் அவரது பேச்சு எடுபடாத நிலையில், “தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சின்னம்மா வர வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது கட்சியின் கொள்கைப்படி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதிமுகவின் பல பொறுப்புகளில் பணியாற்றிய எனக்கு ஒரு சிறு சறுக்கல் ஏற்பட்டது. அதில் இருந்து தற்போது மீண்டும் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார். தற்போது கட்சி தலைமையாக உள்ள எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்படுபவர்கள் மட்டுமே உயிரோடு இருப்பவர்கள் மற்றவர்கள் எல்லோரும் இறந்து போனதற்கு சமம் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் அன்வர் ராஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here