உடற்பயிற்சி நிலையம் பயிற்சியாளரை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்கிய சம்பவத்தில் வழக்கறிஞர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது. இவர்களில் ஒருவரின் தந்தை சின்னமண்டலி தி.மு.க., கிளைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் தாயார் ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் அடைக்கப்பட்ட பாலச்சந்தர் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 23.
இவர் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
கடந்த 21ம் தேதி இரவு அன்று மப்பேடு உடற்பயிற்சி கூடத்தில்
பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று தனியாக கொண்டிருந்தபோது பாலா மற்றும் அவர் நண்பர்கள் இரண்டுபேர் மணியை வழிமறித்து முன்விரோதம் காரணமாக ஆபாசமாக பேசி கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர் .
இரத்த வெள்ளத்தில் இருந்த மணியை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பவம் குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோத காரணத்தால் மணி தாக்கப்பட்டதாக தெரிய வந்தது. இதையடுத்து மணியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பேரம்பாக்கத்தை சேர்ந்த பாலச்சந்தர் 35, அரக்கோணத்தைச் சேர்ந்த கோகுல் 22, கண்ணன் 24 மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாலச்சந்தர். கோகுல் கண்ணன் ஆகிய 3 பேரை புழல் சிறையிலும் சிறுவர்கள் 2 பேரை கெல்லீஸ் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஒருவரின் தந்தை சின்னமண்டலி தி.மு.க., கிளைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் தாயார் ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் அடைக்கப்பட்ட பாலச்சந்தர் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.