சந்தன மரம் வெட்டி கடத்திய நான்கு பேர் கைது.

0
98
கைது செய்யப்பட்டவர்கள்

கல்வராயன்மலையில் சந்தன மரம் வெட்டி கடத்திய நான்கு பேரை  கைது செய்து வனத்துறையினர்  விசாரணை.

சந்தன மரம் வெட்டி கடத்த பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஆயுதங்கள் வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள மட்டப்பாறை வனப்பகுதியில் இருந்து சந்தன மரத்தை  மரத்தை வெட்டி கடத்திச் சென்று  சேலம் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் விற்பனை செய்ய உள்ளதாக கல்வராயன்மலை இன்னாடு வனசரக்கர் சந்தோஷ் குமார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் வனத்துறையினர் தீவிர விசாரணை செய்து அதிகாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சி சேலம் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒரு சாக்கு பையில் மரக்கட்டைகளை பதுக்கிக்கொண்டு வேகமாக வந்ததை வனத்துறையினர் பார்த்து அவர்களை வழிமறித்து சோதனை செய்ததில் அவர்கள் சந்தன மரம் வெட்டி விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கல்வராயன் மலை அடிவாரம் கச்சிராயப்பாளையம் அருகே மண்மலை கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டி மகன் சக்திவேல், மாணிக்கம் மகன் முருகன், சுப்புராய மகன் ராமன், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முள்ளுவாடி சின்னு மகன் ரவி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் நான்கு பேர் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 இருபது ஆயிரம் மதிப்பிலான இரண்டு கிலோ  சந்தன மரத்தையும் மரம் கடந்த பயன்படுத்திய இரு சக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

PREVIOUS

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எதிர்க்கட்சியினர் பயந்து ஓடினர் -பிரதமர் மோடி

NEXT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here