விழுப்புரம் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் ரோந்து புரியும் காவலர்களுக்கு அரசு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் நிகழ்ச்சி இன்று காலை 10:30 மணி அளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசாங்க் சாய்.,IPS அவர்கள் காவலர்களுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசாங் சாய் IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், காவல் நிலையங்களில் ரோந்து பணி மேற்கொள்ள காவலர்களுக்கு இன்று 65 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் 49 இருசக்கர வாகனங்கள் ஆன் காவலர்களுக்கும், 16 இருசக்கர வாகனங்கள் பெண் காவலர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதன் மூலம் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் பகல் ரோந்து, இரவு ரோந்து மற்றும் கிரைம் ரோந்து பணி (Alfa Patrols) மேற்கொள்ள வேண்டியும், 16 இரு சக்கர வாகனங்கள் (Pink Patrols) பள்ளி மற்றும் கல்லூரி நேரங்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டியும் இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்.

இது போன்ற ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்களால் இரவு நேரஙளில் நடைபெறும் நிறைய குற்றங்கள் குறைந்துக்கொண்டே வருகிறது. இரவு நேரங்களில் சுற்றித் திரியும் தேவையில்லா ஆட்கள், தேவையில்லா வாகனங்கள், தேவையற்ற கடைகள், தேவையற்ற சண்டைகள் என அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது. இது பகல் நேரங்களில் இருக்கிறதா என்றால், இல்லை. அதனால், இது போன்று இருசக்கர வாகனங்கள் கொடுத்து காவலர்களை கண்கானிக்க விடுவதெல்லாம் அருமையான ஒன்று என்று மக்கள் கூறுகின்றனர்.

பகலிலும் இனி இவர்கள் லேட் ஆக்காமல் டைமுக்கு மக்கள் பிரச்சனையில் வந்து தலையிடுவார்கள் என அவர்கள் நம்புவதாக கூறுகிறார்கள். பிரச்சனை என்று போன் செய்தால் அரை மணி நேரம் கழித்து அங்கு ஆஜர் ஆகிறார்களாம். அதற்க்குள் குற்றம் செய்தவன் தப்பித்து விடுகிறானாம். இது இப்பொழுது தடுக்கப்படும் என்று மக்கள் ஆச்சர்யம்.