விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக போதைப்பொருட்கள் விற்பணை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் பல நாட்களாக வந்து கொண்டிருந்தது.அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து தொடர்ந்து கஞ்சா விற்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சாசாங் சாய்க்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் எஸ் பி யின் தனிப்படை வானூர் வட்டம் திண்டிவனம் அடுத்த கிளியனூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர் அப்பொழுது கஞ்சாவை பாக்கெட் போட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்ல இருந்த நபரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் வயது 27 என்பதும் இவர் ஆந்திரா பகுதியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி அதை பாக்கெட் போட்டு அருகே உள்ள பள்ளி கல்லூரி மற்றும்புதுவை சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது அவரை கிளியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடம் இருந்த பாக்கெட் போடப்பட்ட ஒரு கிலோ கஞ்சா மற்றும் 32 ஆயிரம் பணம், எடை மெஷின் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் இவர் யார் யார் இடமிருந்து கஞ்சா வாங்கினார் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.