போருக்கு ரெடியாகுங்க! வீரர்களுக்கு உத்தரவிட்ட ஈரான்! இஸ்ரேல் மட்டும் அந்த முடிவை எடுத்தால், சிக்கல்..

0
45
  • ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.

சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்துவதற்கான நாளை இஸ்ரேல் குறித்துவிட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது. நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் அந்நாட்டு அரசிடம் தெரிவித்து உள்ளார்களாம். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடக்கும். இஸ்ரேல் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும்.

ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார்.

சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் புகார் வைத்துள்ளது. தங்களின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஈரான் புகார் அளித்துள்ளது. அணுசக்தி தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இதை அனுமதிக்க கூடாது என்று ஈரான் புகார் வைத்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக்குழுவுக்கு முறையான கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

இப்படி இஸ்ரேல் தாக்கும் பட்சத்தில் அதற்கு ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளதாம். அதன்படி ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.

இஸ்ரேல் என்ன மாதிரியான தாக்குதல் நடத்துகிறது என்பதை பொறுத்து ஈரானின் பதிலடி மாறும் என்கிறார்கள். ஈரானின் ராணுவ தளவாடங்களை மட்டும் இஸ்ரேல் தாக்கினால் ஈரான் பதிலடி தராது. ஆனால் ஈரானின் மக்கள் இருக்கும் இடம், அணு உலைகளை இஸ்ரேல் குறி வைத்தால் ஈரான் கடுமையான பதிலடியை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க:https://www.thenewscollect.com/1600-pregnant-women-give-birth-in-dana-storm-camps-the-odisha-government-has-achieved/ 

ஏற்கனவே ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில்.. இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபரும், அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள். மற்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here