மதுப்பழக்கத்தை கைவிட்டால் அரசு வேலை.! சூப்பர் அப்டேட் கொடுத்த மா.சு.! குஷியில் மதுப்பிரியர்கள்.!

0
111
அமைச்சர் மா.சுப்ரமணியம்

சென்னை: மது போதைக்கு அடிமையானவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட்டால், அவர்களின் தகுதிக்கேற்ப அரசாங்கத்தில் வேலை கொடுக்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மதுபோதைக்கு அடிமையாகி உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக “மனம் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம்” சென்னை கண்ணகி நகரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தீவிரமாக மதுப் பழக்கக்திற்கு ஆளாகி தங்கள் உடலை கெடுத்துக் கொண்டவர்கள். அதி தீவிரமாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகி சீரழிந்தவர்கள். புதிதாக மதுப்பழக்கத்துக்கு ஆளாகி அதிலிருந்து மீள முடியாமல் இருப்பவர்கள் என எந்த நிலையில் இருந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி. நீங்கள் ‘மனம்’ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதுதான் இந்த மருத்துவமனையின் லட்சியம். அரசாங்கமே இந்த திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. வெறுமென மருத்துவமனையை மட்டும் தொடங்கி வைக்காமல் ஒரு அறிவிப்பையும் இங்கு நான் வெளியிடுகிறேன். மிக முக்கியமான அறிவிப்பு இது. இந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் உடல்நிலை முழுமையாக சோதிக்கப்படும். எத்தனை வருடங்களாக இவர் மது அருந்துகிறார்? மதுவால் அவரது உடல் உறுப்புகள் எத்தனை சதவீதம் சேதம் அடைந்திருக்கிறது? அவரது ரத்தத்தில் ஆல்கஹால் எவ்வளவு கலந்திருக்கிறது? என மருத்துவர்கள் ஒரு லிட்ஸ் தயாரிப்பார்கள்.

பின்னர் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து யார் மது போதையில் இருந்து மீண்டு, முழுமையாக குணம் அடைகிறார்களோ, அவரது வயது – தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்க வேலை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 8-ம் வகுப்பு படித்திருந்தால் அலுவலக உதவியாளர் வேலை, டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் அரசாங்கத்தில் டிரைவர் வேலை என அவரவர் படிப்பு தகுதிக்கேற்ப அரசு வேலை கொடுக்கப்படும். இந்த மருத்துவமனையை தமிழகம் முழுவதும் திறக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

மதுக்கடைகளை மூட வக்கில்லை. ஆனால், மக்கள் மட்டும் குடிப்பதை நிறுத்த வேண்டுமாம். பாதி சாராய ஆலைகள் திமுக நிர்வாகிகள் பேரில் தான் உள்ளது. அதனால் முதலில் அவர்களை மூடச் சொல்லுங்கள் என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here