- தஞ்சை பெரிய கோவில் வந்த ஆளுநர் ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வராகி பெருவுடையாரை ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபட்டார். தஞ்சை பெருவுடையார்கோவில் வந்த ஆளுனர். ஆர். என்.ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை. மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்யங்கள் இசையுடன் வரவேற்கப்பட்டார்.
பெருவுடையார் கோவில் தெற்கு பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் வராஹி அம்மனை வழிபட்டார். தொடர்ந்து பெருவுடையார் சன்னதிக்கு சென்ற அவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாரை வழிபட்டார்.
தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும் இந்தக் கோவிலைப் பற்றி உலா வருகின்றன. இந்தக் கோவிலின் சிறப்புகள் என்னென்ன?
ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் மிகப் பெரிய இந்துக் கோவில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பிரபல இந்து கோவில்களைப் பட்டியலிட்டால், தமிழகத்திலிருந்து திருவரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோவில் ஆகிய கோவில்கள் நிச்சயம் இடம்பெறும்.
இந்த கோவில்களில் தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக விளங்குகிறது.
கி.பி. 850ல் விஜயாலயச் சோழன் முத்தரைய மன்னன் ஒருவரைத் தோற்கடித்து பிற்கால சோழ பேரரசை நிறுவியபோது, தஞ்சையை சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான். இதற்குப் பிறகு சுமார் 176 ஆண்டுகள், அதாவது ராஜேந்திரச் சோழனின் முதல் பத்தாண்டுகள் வரை தஞ்சையே சோழர்களின் தலைநகராக இருந்தது.
இந்த 176 ஆண்டுகளில் தஞ்சாவூரில் மிகப் பெரிய அரண்மனைகளும் கோவில்களும் கட்டப்பட்டன. கி.பி. 1218ல் தஞ்சை மீது படையெடுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சை முழுமையையும் சோழர்களின் அரண்மனை உட்பட அனைத்தையும் அழித்தான்.
ஆனால், கோவில்கள் தப்பின. ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பின்போது, கோவில்களும் தாக்கப்பட்டன. இருந்தபோதும் பெருவுடையார் கோவில் பெரும் சேதமின்றி தப்பியது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/thanjavur-1039-students-participated-in-various-programs-on-the-occasion-of-1039th-sadaya-festival/
தஞ்சாவூரில் சோழப் பேரரசு மலரும் முன்பே, தளிக்குளத்து மகாதேவர் கோவிலும் பிரம்மகுட்டம் கோவிலும் இருந்தன. விஜயாலயச் சோழன் தலையெடுத்தபோது, நிசும்பசூதனி என்ற தேவிக்காக கோவில் ஒன்றை எழுப்பினான்.
ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது சோழநாடு வளமடைய ஆரம்பித்திருந்தது. பெரும் செல்வம் குவிய ஆரம்பித்தது. காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜ சோழனை பெரிதும் கவர்ந்தது. “அதன் விளைவாகவே தஞஅசையில் ராஜராஜீச்சரம் எனும் பெருங்கோவில்” எழுந்தது என தனது இராஜராஜேச்சரம் என்ற நூலில் குறிப்பிடுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.