களிமண்ணால் காமராஜர் சிலை அரசு பள்ளி மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்.

0
85
மாணவர்கள் செய்த காமராஜர் சிலை

கல்விக்கண் திறந்த காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் அரசு விழாவாகவே தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழாக்கள் பல்வேறு கருத்தரங்குகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு என கோலாகலமாக நடைபெற்றது வருகிறது.

மாணவர்களுக்கு பரிசு

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம்  அரசமங்கலம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அந்த பள்ளியின் ஆசிரியை ஹேமலதா உடன் இணைந்து களிமண்ணால் காமராஜர் சிலையை வடித்து மாணவர்களிடையே காமராஜர் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் கோபு தலைமை ஏற்க விழா சிறப்பாக நடைபெற்றது.

பரிசு பெறும் மாணவர்கள்

மாணவர்களிடையே கல்வி அறிவை வளர்க்க பல அரசு பள்ளிகளை புதிதாக துவக்கி கிராமப்புற மாணவர்களையும் கல்வியறிவு பெறுவதற்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் காமராசர். மேலும் அரசமங்கலம் அரசுப் பள்ளியில் காமராஜர் 121 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here