மதுரை-முரட்டன்பட்டி கிராமத்தில் போலி இன்ஸ்டா காதலியை நம்பி சென்ற காதலனுக்கு அறிவாள் வெட்டு.

0
117
ஜானி முருகன்,திருப்பதி,அனுஷியா,சரண்யா

மதுரை கரிமேடு அருகேயுள்ள முரட்டன்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞரான வினித்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த ஜாக்ஸ் என்ற இளைஞருக்கும் இடையே இரு கும்பலாக செயல்பட்டு அவ்வப்போது மோதல்போக்கும் நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாக்ஸை வினித்குமார் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவந்த நிலையில் கொலை செய்ய முயன்றபோது காயங்களுடன் தப்பியுள்ளார்.

ஜானி முருகன்,திருப்பதி

இதனை தொடர்ந்து ஜாக்ஸ் தனது சகோதரியான அனுஷியாவிடம் வினித்குமார் தன்னை கொலை செய்வதாக மிரட்டிவருகிறான் அவனை எப்படியாவது தீர்த்த கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை மனதில் வைத்து வினித்குமாரை பழிவாங்க நினைத்த தங்கச்சி அனுஷியா தனது கணவருடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் அம்மு என்ற பெயரில் போலியான அக்கவுண்டை உருவாக்கி தான் கோவையில் நர்சிங் படித்துவருவதாகவும், தனது தோழியும் மதுரையை சேர்ந்தவர் அவரும் என்னுடன் இருக்கிறார் என அறிமுகமாகி 2 வாரமாக வினித்குமாரிடம் நாள்தோறும் மெசேஜ் மூலமாக பழகிவந்துள்ளார்.


அவ்வப்போது இன்ஸ்டாவில் காதலையும் வெளிப்படுத்தியதோடு, முகத்தை மறைத்தபடி வீடியோகாலிலும் அவ்வப்போது பேசி வினித்குமாரின் ஆசையை தூண்டியுள்ளார்.
இதனால் அனுஷியா மீது தீராக்காதல் கொண்ட வினித்குமார் இன்ஸ்டா மூலமாக தன் வயப்படுத்தி நேரடியாக சந்தித்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கடந்த 6ஆம் தேதியன்று தான் தோழி சரண்யாவுடன் மதுரைக்கு வந்திருப்பதாகவும் தன்னை நேரடியாக சந்திக்க வேண்டும் என கூறி வினித்குமாரை அழைத்த போலி அம்முகுட்டியை நம்பி சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லா சந்துக்கு சென்று முகம்காண வேண்டும் என காதல் வார்த்தைகளை உதிர்த்துகொண்டிருந்த காதல் டூயட் பாட நினைத்த போது திடிரென போலி அம்முகுட்டி வினித்குமாரிடம் செல்போனை கேட்டவுடன் செல்போனை கொடுத்த சில நொடியிலயே திடிரென அங்குவந்த இன்ஸ்டா அம்முவான அனுஷ்யாவின் கணவர் ஜானி முருகன் அவனது நண்பன் திருப்பதி ஆகியோர் தாங்கள் வைத்திருந்த வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கைகளில் வெட்ட தொடங்கியுவுடன் அதனை தடுத்து கூச்சலிட்டவுடன் அனுஷ்யா மற்றும் அவரது கணவர் ஆகியோர் அங்கிருந்து எஸ்கேப் ஆகினர்.

அனுஷியா,சரண்யா

படுகாயங்களுடன் இருந்த வினித்குமார் 100க்கு தகவல் அளித்துவிட்டு் தானகவே வீட்டிற்கு சென்று வெட்டுக்காயத்திற்கு மருந்தை எடுத்துள்ளார்.

இதனையடுத்து தல்லாகுளம் காவல்துறையினர் இது தொடர்பக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜாக்ஸ்சின் சகோதரியான அனுஷ்யா தன்னை அம்மு என போலியான இன்ஸ்டா பக்கத்தின் காதலிப்பது போல பழகி கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போலி இன்ஸ்டா அம்முவான அனுஷியா, அவரது கணவர் ஜானி முருகன், அனுஷியாவின் தோழி சரண்யா, நண்பர் திருப்பதி ஆகிய 4பேரையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here