அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.,இந்த மாத இறுதியில் அரசாணை வெளியீடு.!

0
120
பிரதமர் மோடி

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதோடு சேர்த்து அகவிலைப்படி அரியர் தொகையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏஐசிபிஐ இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

பெரும்பாலும் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 42 சதவிகிதம் அகவிலைப்படி வாங்குபவர்கள் இனி 46 சதவிகிதம் வாங்குவார்கள். ஆகஸ்ட் முதல் வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் 26 ஆயிரம் ரூபாய் அடிப்படை வருமானம் வாங்கும் நபர்களுக்கு 11960 ரூபாய் வரை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பிரதமர் மோடி

இந்த உயர்த்தப்பட்ட 42 சதவிகித அகவிலைப்படிக்காக விரைவில் டிஏ நிலுவை தொகை வழங்கப்பட உள்ளது. 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை எவ்வளவு இருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது. இதை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் உங்கள் அடிப்படை வருமானத்தில் அகவிலைப்படி எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். உங்கள் சம்பளத்தில் DA கணக்கிட, உங்கள் அடிப்படை சம்பளத்தை தற்போதைய) DA விகிதத்தால் பெருக்கி பின்னர் முடிவை 100 ஆல் வகுக்கவும்.

அதாவது உங்கள் அடிப்படை வருமானம் 29200 ரூபாய் என்னும் பட்சத்தில், DA கணக்கீடு பின்வருமாறு செய்ய முடியும்: (42 x 29200) / 100 = 12264. உங்கள் அடிப்படை வருமானம் 29200 ஆக இருந்தால் ( பே மேட்ரிக்ஸ் நிலை 5). நீங்கள் சம்பாதிக்கும் DA தொகை ரூ. 12264. இந்த டிஏ தொகைக்கு 18 மாத அரியரை கணக்கிட வேண்டும் என்றால், டிஏ தொகையை மாதங்களால் பெருக்க வேண்டும். 18 மாதங்கள் அரியர் என்றால் அதனால் பெருக்க வேண்டும். அதாவது டிஏ தொகை 18 மாத அரியரோடு 220752 ரூபாயாக இருக்கும்.

இந்த தொகைதான் பெரும்பாலும் பேசிக் அரியர் தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி – ஜூன் மற்றும் ஜூலை – டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 – 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி கணக்கீடு: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது. இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது. அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன. அதாவது ஒரு புள்ளி ஏறுவது, ஒரு புள்ளி இறங்குவது என்று ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன.

ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இதன் மூலம் புள்ளிகள் தற்போது 134.2 ஆக உயர்ந்துள்ளது. இனிமேல்தான் இந்த மாதத்திற்கான புள்ளிகள் வர வேண்டும். அதை வைத்தே அகவிலைப்படி உயர்வு இருக்கும். இந்த மாத இறுதியில் இந்த புள்ளிகள் வரும். அந்த புள்ளியை வைத்து அகவிலைப்படி உயர்வை தீர்மானம் செய்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here