IND vs SA 1st T20 பிளேயிங் லெவன் – இளம் பவுலரை இறக்கப் போகும் சூர …

The News Collect
2 Min Read
  • டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி முதல் டி20 போட்டியில் இன்று விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஒருவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிமுகப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. நட்சத்திர வீரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இடம் பெற உள்ளனர். திலக் வர்மா, ரிங்கு சிங் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளனர். திலக் வர்மா நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வார் என கூறப்படுகிறது. மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக விஜயகுமார் வைஷாக் ஆட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

விஜயகுமார் வைஷாக் வேகப் பந்துவீச்சாளராக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் இதுவரை 11 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி 13 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். ஆனால், அதன் அடிப்படையில் மட்டும் அவர் டி20 அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். குறிப்பாக முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 49 இன்னிங்ஸ்களில் 103 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். முதல் தர போட்டிகளில் அவரது பவுலிங் சராசரி 23.8 ஆக உள்ளது. பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 44.6 ஆக உள்ளது. ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு இது உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் நல்ல பவுலிங் செயல்பாடு ஆகும்.

அதேபோல இதுவரை 30 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி அதில் 42 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவரது பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 15 ஆக உள்ளது. அதாவது 15 பந்துகளுக்கு ஒருமுறை அவர் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவரது பவுலிங் சராசரி 20.8 ஆக உள்ளது. டி20 போட்டியில் ஒவ்வொரு 20 ரன்கள் விட்டுக் கொடுக்கும் போதும் அவர் ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

விஜயகுமார் வைஷாக் அடுத்து இந்திய ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியிலும் ஆட வாய்ப்பு உள்ளது. எனவே, அவருக்கு இப்போது இந்திய டி20 அணியில் முதல் கட்டமாக வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரை அறிமுகம் செய்வார் என இந்திய அணி வட்டாரத்தில் கூறப்படுகிறது. அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் மற்றும் விஜயகுமார் வைஷாக் ஆகிய மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இடம் பெறுவார்கள். அர்ஷ்தீப் சிங்கை சுற்றியே இந்திய அணியின் பந்துவீச்சு இருக்கும். அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி சுழற் பந்துவீச்சாளர்களாக இடம் பெற வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் –

கொஞ்சம் இதையும் படிங்க :   https://www.thenewscollect.com/student-murder-case-madras-high-court-orders-parents-of-arrested-pachaiyappan-college-students-to-appear/

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், விஜயகுமார் வைஷாக், அவேஷ் கான், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.

Share This Article
Leave a review