கைதி எண் 1440-யிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை.!

0
147
செந்தில் பாலாஜி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கி உள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு செந்தில் பாலாஜி காலை உணவு சாப்பிட, 9 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணை தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் கடந்த ஒன்றரை வாரமாக தீவிரமாக விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில்
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வரும் 12ம் தேதி வரை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் இருக்க போகிறார். இதில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் முக்கியமான பின்வரும் கேள்விகளை கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றில் இருந்து விசாரணை:

இதையடுத்து செந்தில் பாலாஜி நேற்று கஸ்டடி எடுக்கப்பட்டார். நீதிமன்ற காவலில் இருந்தவருக்கான டிரான்ஸ்பர் நடவடிக்கை நேற்று முடிந்தது. இதையடுத்து நேற்று இரவே செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கி உள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு செந்தில் பாலாஜி காலை உணவு சாப்பிட, 9 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணை தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று அவரிடமே 50 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  1. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்தது உண்மையா? அதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?
  2. இதில் பெறப்பட்ட பணம் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதா?
  3. செந்தில் பாலாஜி தம்பி அசோக்கிற்கு இதில் தொடர்பு உள்ளதா?
  4. எந்தெந்த நிறுவனங்களில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டது?
  5. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது?
  6. இதில் முதலீடுகள் மறைக்கப்பட்டு இருந்தால் அதற்கு உடந்தையாக இருந்தது யாரெல்லாம்?
  7. தற்போதைய அரசு நிர்வாகிகள் அதிகாரிகள் யாருக்கெல்லாம் இதில் பங்கு உண்டு?
    என்று அதிகாரபூர்வமாக இதில் கேள்விகளை அமலாக்கத்துறை கேட்கும் என்கிறார்கள்.

அதிகாரபூர்வமற்ற முறையில் நிகழ்கால தமிழ்நாடு அரசுக்கு எதிராக சில கேள்விகள் கேட்கப்படலாம், இதனால் அவரை அடைத்து வைக்கவும், விசாரணை செய்யவும் அறைகளை அமலாக்கத்துறை தயார் செய்து உள்ளது. அதிமுக: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் திமுக ஆட்சியில் நடக்கவில்லை. இவர் தற்போது திமுக அமைச்சர் என்பதை தாண்டி, திமுகவிற்கு இதனால் பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் அதிமுக ஆட்சியில்தான் இது நடந்தது என்பதால் அப்போது நிர்வாகத்தில் இருந்தவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத்தான் இந்த விவகாரம் காரணமாக பெரிய சிக்கல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பாக கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் மட்டுமே திமுகவிற்கு சிக்கல் ஏற்படலாம். ஆனால் திமுக இந்த வழக்கில் தொடர்பே கொண்டு இருக்கவில்லை என்பதால் திமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு இதனால் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here