சென்னை: விலங்குகள் நல ஆர்வலரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி சமூக அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அந்த வகையில், பொதுக்கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிப்பது தொடர்பான ‘டாய்லட் பெஸ்டிவல்’ பற்றியும் பேசியிருக்கிறார். தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை அறிவியல் துறை, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், தமிழ்நாடு காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குதிரைகளுக்கு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடத்தின.
இந்த முகாமில், இந்த குதிரைகளுக்கு ஆண்டுதோறும் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி முறையாக செலுத்தப்படுகிறதா? உடல்நிலை எவ்வாறு உள்ளது? என்பதை கண்டறிவதற்காக ‘மைக்ரோ சிப்’ பொறுத்தப்பபட்டது. இந்த திட்டத்தை விலங்குகள் நல ஆர்வலரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார்.
இதன் பின்னர் பேசிய கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
சென்னையில் 160 குதிரைகள் உள்ளன. குதிரைகளுக்கு நிறைய ஊட்டசத்து பற்றாக்குறை உள்ளது. நிறைய வைரஸ் பாதிப்பு உள்ளது. குதிரைகளுக்கு டெட்டனஸ் ஊசி போடப்பட்டுள்ளது. பிற விலங்குகளை போலவே குதிரைகளுக்கும் அதே நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. கடற்கரையில் செல்லும் குதிரைகள் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு நிறைய இறந்துபோவதாக கேட்கிறீர்கள். மனிதர்களான நாம் தான் குப்பைகளை போடாம இருக்கனும். குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும். அந்த சிவிக் சென்ஸ் நம்மளுக்கு இருக்க வேண்டும். இதுபோன்ற செயலால் விலங்குகளுக்கு மட்டும் இல்லை நம்மையும் தான் பாதிக்கிறது. கடலில் பிளாஸ்டிக் செல்வதால் மீன்களை நாம் சாப்பிடும் போது நமக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இது உலகளாவிய பிரச்சினை.
எல்லோரும் சேர்ந்துதான் இதை நாம் மாற்ற வேண்டும். குதிரை மட்டும் இன்றி பிற ஆடு, மாடு உள்லிட்ட விலங்குகளும் பேப்பர் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது பற்றி கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் அனைத்து துறைகளும் சேர்ந்து கூட்டு முயற்சியாகவே செய்து கொண்டு இருக்கிறோம். இது போக போக சரி பண்ணிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏற்கனவே முன்னெடுத்த ‘கக்கூஸ்’ என்ற திட்டம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து டாய்லட்ஸ்களை எப்படி கட்டுவது, கிளீனாக எப்படி வைப்பது என்பது குறித்து பிளான் பண்ணுறோம். அடுத்து இதைத் தான் பிளான் பண்ணுறோம். அடுத்து இந்த ஆண்டில் டாய்லட் பெஸ்டிவல் பிளான் பண்ணுறோம்” என்றார்.
மகனுக்கு அடுத்து மருமகள் வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே நுழைகிறாரா? என்ற கேள்வி திமுக உடன்பிறப்புகள் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறது. கனிமொழியை ஓரங்கட்ட ஸ்டாலினின் மருமகள் களமிறக்கப்பட்டுளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.