- இஸ்ரேல் – காசா இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த மோதல் தற்போது மத்திய கிழக்கில் விரிவடைந்து பெரிய போராக மாறும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பாலஸ்தீனம், லெபனான், ஈரான் உள்பட 5 நாடுகள் மீது இஸ்ரேல் மோதி வருவது தான் காரணம். இதனால் மத்திய கிழக்கில் 3ம் உலகப்போர் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரான் அருகே சில இடங்களில் ஏவுகணைகள் வெடித்து சிதறியுள்ளன. குறிப்பாக இமாம் கோமேனி சர்வதேச விமான நிலையத்தின் அருகேயும் ஏவுகணைகள் வெடித்துள்ளன. அதேபோல் ஐஆர்ஜிசி எனும் டெக்ரானில் உள்ள இஸ்லாமிக் புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guards Corps அல்லது IRGC) தலைமையிடத்தையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இது தற்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இன்று அதிகாலையில் சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் புறநகர் நகரில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியா தனது வான்வெளி பாதுகாப்பு அமைப்பின் மூலம் இஸ்ரேலின் ஏவுகணைகளை இடைமறித்து சமாளித்துள்ளது.
அதேபோல் ஈராக் நாட்டிலும் இன்று இஸ்ரேல் தாக்குதல் தெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ராவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த பாஸ்ரா என்பது ஷியா கிளர்ச்சியாளர்களின் தளமாக உள்ளது. குறிப்பாக சதாம் உசைன் காலத்தில் இங்கு தான் ஷியா கிளர்ச்சியாளர்கள் முகாமிட்டு இருந்தனர். இதன்மூலம் இன்று ஒரே நாளில் இஸ்ரேல் 3 நாடுகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுதவிர பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாசுக்கு இடையேயான போரை இஸ்ரேல் தொடர்ந்து வருவதோடு, லெபனானில் இருந்து குடைச்சல் தரும் ஹிஸ்புல்லாக்களையும் அந்த நாடு சமாளித்து வருகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 5 நாடுகளுடன் இஸ்ரேல் அட்டாக் செய்து வருகிறது. இது தற்போது 3ம் உலகப்போருக்கான தொடக்கப்புள்ளியாக மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது மத்திய கிழக்கு பிராந்தியத்தை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் தான் இஸ்ரேல் உள்ளது. இஸ்ரேலை பொறுத்தவரை யூதர்கள் அதிகம் உள்ளனர். மத்திய கிழக்கில் இருக்கும் ஒரே யூத நாடு என்பது இஸ்ரேல் மட்டும் தான். இதனால் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணையலாம் என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் பாலஸ்தீனத்தின் காசா, சிரியா மற்றும் லெபனானுடன் இஸ்ரேல் மோதலை தொடங்கி வருகிறது. ஈரான் மற்றும் ஈராக் நாடுகள் நேரடியாக இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் கூட காசாவில் செயல்படும் ஹமாஸ் மற்றும் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புகள் ஈரான் ஆதரவில் செயல்படுகின்றன. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதால் ஈரான் நேரடியாக இஸ்ரேலுடன் மல்லுக்கட்டுகிறது.
கொஞ்சம் இதையும் படிங்க: https://www.thenewscollect.com/army-soldier-on-vacation-dies-in-a-two-wheeler-accident/
அதேபோல் ஈராக்கை எடுத்து கொண்டால் தொடக்கம் முதலே இஸ்ரேல் நாட்டுடன் நல்ல உறவு என்பது கிடையாது. இஸ்ரேல் 1948 ல் தனி நாடாக உருவானதில் இருந்தே இருநாடுகளுக்கும் மோதல் என்பது இருந்து வருகிறது. இஸ்ரேலை தனி நாடாக ஈராக் அங்கீகரிக்காத நிலையில் தொடர்ந்து இருநாடுகள் இடையே யுத்தம் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி ஈராக்கில் ஒசாமா பின்லேடன் இருந்தபோது இஸ்ரேலுக்கு எதிரான சதிவேலைகளை அந்த நாடு அதிகம் செய்தது. இதனால் மொத்தமாக தங்களின் எதிரி நாடுகளுக்கு ‛செக்’ வைக்கும் வகையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா, லெ பனான், ஈரான், சிரியா, ஈராக் என 5 இஸ்லாமிய நாடுகளுடன் மோதி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.