வன்கொடுமை வழக்கில் 7 நபர்களுக்கு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
கடந்த 18.04.2019-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரை முன்விரோதத்தின் காரணமாக உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 1)சக்திவேல் மகன் தர்மராஜ்(28), 2)சன்யாசி மகன் சத்தியா @ சத்தியராஜ்(29), 3)ரமேஷ் மகன் தினேஷ் பாபு(22), 4)செல்வம் மகன் ஸ்ரீதர்(29), 5)செல்வம் மகன் விஜய் @ நாய்வால் விஜய்(23), 6)சங்கர் மகன் நாராயணன்(29),
7) வண்டிமேட்டு மகன் காட்டான் @ மணிபாலன் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஆபாசமாக பேசி தாக்கியது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடித்து எதிரிகளின் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று 31.07.2023-ந் தேதி விழுப்புரம் SC/ST நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திருமதி.பாக்கியஜோதி அவர்கள் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் எதிரிகள் 7 பேரும் குற்றவாளிகள் தான் என்று உறுதி செய்து, அனைவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனையுடன் தலா 5,000/- ரூபாய் அபதாரமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.N.மோகன்ராஜ் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.