தக்காளி விலை நூறு ரூபாய்க்கு மேல் விற்பனையானது ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது ஒரு சில பகுதிகளை மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே இந்த விலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விலை குறைப்பு எப்போது ஏற்படும் என மக்கள் ஏங்கி கிடக்கும் இந்த நிலையில்
![](https://www.thenewscollect.com/wp-content/uploads/2023/09/IMG_20230704_153432.jpg)
தமிழக அரசு சுமார் 82 நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்வது என முடிவெடுத்து இன்றிலிருந்து அந்த விற்பனை தொடங்கியுள்ளது. ஆனாலும் கூட தமிழகம் முழுவதும் தக்காளி விலை குறைந்தபாடில்லை.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மூன்று சக்கர வாகனத்தில் தக்காளி வெங்காயம் கொண்டு வரப்பட்டு கடைவீதி பகுதியில் வண்டியை நிறுத்தி 100 ரூபாய்க்கு இரண்டு கிலோ 50 ரூபாய்க்கு ஒரு கிலோ என விற்பனை செய்து வருகிறார் ஒரு விவசாயி.கடந்த சில நாட்களாக தக்காளி விலை நூறு ரூபாய்க்கும் மேல் விலை உயர்ந்துதக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது அதனை கட்டுப்படுத்தும் விதமாக வியாபாரி ஒருவர் தக்காளி விலையை குறைத்து இரண்டு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
![](https://www.thenewscollect.com/wp-content/uploads/2023/09/IMG_20230704_153500.jpg)
இதனால் பொதுமக்கள் அந்த வாகனத்தை சுற்றி விலை மலிவான தக்காளி வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர் இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் தக்காளி விலை குறைவானதால் அதிக எண்ணிக்கையில் தக்காளி வாங்கி செல்கின்றனர்