இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசு ஆன பிறகு மக்களே மக்களை ஆளக்கூடிய மக்களாட்சி தத்துவத்தை நிலைநாட்டும் விதமாக தேர்தல் அரங்கேறியது.தேர்தலில் போட்டியிடும் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் என்ன ஓட்டத்தை ஜனநாயக முறைப்படி சட்டமன்றம், பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவே மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். போட்டிகள் மக்களின் நலத்திட்டங்களில் இருக்க வேண்டுமே தவிர சீட்டு எண்ணிக்கையில் இருக்கக் கூடாது என்கிற அந்த ஜனநாயகம் மரபு தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. உதாரணமாக கமலஹாசன் சரத்குமார்.

மக்களுக்காக போராடவில்லை மக்கள் பிரச்சனைக்காக மக்களோடு சேர்ந்து நிற்கவில்லை மக்கள் பிரச்சனையை பேசுவேன் என்று காற்று, மழை, வெயில் என மக்களோடு பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை, அறுவை சிகிச்சை செய்து பிறந்த குழந்தை போல மாநிலங்களவை உறுப்பினர் பதவி கமலுக்கு திமுக வழங்கியிருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதை தவிர வேறு எதுவும் இல்லை.
இது ஒரு தவறான முன் உதாரணம் என்பதை திமுக போன்ற நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உள்ள கட்சிகளே புரிந்து கொள்ளவில்லை என்றால் அந்த புரிதல் திமுகவுக்கு இல்லை என்று எண்ணப்படுகிறது.
பிரச்சாரத்திற்கு ஆள் தேவை என்கிற ஒரே காரணத்திற்காக நடிகர் கமலஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினராக நியமிப்பதற்கு ஒப்பந்த போட்டிருப்பது நகைப்பை ஏற்படுத்துகிறது.
அடுத்ததாக மக்கள் பிரச்சனைக்காக ஒரு இயக்கத்தை தொடங்கி மக்களுக்கான பிரச்சினைகளுக்காக மக்களோடு இணைந்து போராட்டங்கள் பல நடத்தி ஜனநாயகம் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றம், சட்டமன்றத்திற்கு சென்று மக்கள் குரலாக ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சிகள் குறிப்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதன் நிறுவனர் சரத்குமார் ஒரு சீட்டுக்காக தன் கட்சியை சேர்ந்த எவ்வளவு பெரிய தியாக உள்ளம் கொண்ட தொண்டர்களை அடமானம் வைத்திருப்பது வரலாற்றில் அரசியலில் மன்னிக்க முடியாது ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகிறது.
செயற்குழுவை கூட்டவில்லை பொதுக்குழுவை கூட்டவில்லை தன் மனைவியோடு கலந்தாலோசித்து உடனடியாக ஒரு கட்சியை கலைக்கிற ஒரு முடிவை எடுக்கக்கூடிய சரத்குமார் எல்லாம் அரசியலில் தலைவர் என்று சொல்லிக் கொள்வதற்கு தகுதி இல்லாதவர் என்பதை காட்டுகிறது. பிஜேபி, அதிமுக, திமுக போன்ற கட்சியினர் தங்கள் கட்சியின் சுய லாபங்களுக்காக மக்களுக்காக போராடாமல் பிரச்சார யுக்திக்காக இப்படி கட்சிகளை கட்சி தலைவர்களை அழைத்துக்கொள்வது அவமானம், அவமானம், அவமானம்.
ஆசிரியர்
தி நியூஸ் கலெக்ட்