நிலவில் சந்திரயான் 3-ஐ தரையிறக்கிய அறிவியலாளர்களுக்கு பாராட்டு – ராமதாஸ்.

0
162
நிலவில் சந்திரயான் 3-ஐ தரையிறக்கிய அறிவியலாளர்களுக்கு பாராட்டு - ராமதாஸ்.

விண்வெளியில் வியத்தகு சாதனையை படைத்தது  இந்தியா. நிலவில் சந்திரயான் 3-ஐ தரையிறக்கி சாதனை படைத்த தமிழர் தலைமையிலான  அறிவியலாளர்களுக்கு பாராட்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”சென்னைக்கு அருகில் ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி தொடங்கிய  சந்திரயான் 3 விண்கலத்தின் பயணம்  41 நாட்களுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் நிறைவடைந்து சாதனையாக மாறியிருக்கிறது.

பதட்டம் நிறைந்த கடைசி 19 நிமிட தரையிறங்கல் நிகழ்வுக்குப் பிறகு  விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நிலவில் தடம் பதித்த  உலகின் நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தை சென்றடைந்த  முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனையை படைத்த குழுவின் தலைவரான வீரமுத்துவேல்  எங்கள் விழுப்புரம் மாவட்ட மண்ணின் மைந்தர் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை. சாதனைக்கு காரணமான அனைவருக்கும்  எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here