மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளம், கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனமான சிஃப்னெட் (CIFNET), நாட்டின் மீன்பிடித் தொழிலை வலுப்படுத்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. கப்பல் வழிகாட்டி படிப்பு (VESSEL NAVIGATOR COURSE), கடல்சார் ஃபிட்டர் படிப்பு (MARINE FITTER COURSE) வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை இந்த நிறுவனம் வரவேற்கிறது. 2023-24 ஆம் ஆண்டுக்கான வகுப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை நிறுவனத்தின் www.cifnet.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்துடன் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த இரண்டாண்டு படிப்புகளின் செய்முறைப் பயிற்சி ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலில் மேற்கொள்ளப்படும். சிஃப்னெட் நிறுவனத்தின் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் படிப்புகள் நடத்தப்படும்.கல்வித்தகுதி: கணிதம் மற்றும் அறிவியலில் தனித்தனியே 40 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது: 2023 ஆகஸ்ட் 1-ந் தேதி நிலவரப்படி 15 முதல் 20 ஆண்டுகள். பட்டியல்/பழங்குடியினத்தவருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. 3 இடத்திலும் சேர்த்து 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அகில இந்திய அடிப்படையிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்படும். படிப்புகளை முடித்தப் பிறகு நிறுவனப் பயிற்சி வழங்கப்படும். இதற்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.20,500 சீருடைப் படி (1முறை) ரூ.2,500.
இதற்கிடையே, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 17.07.2023–லிருந்து 25.07.2023-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்கள் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா. பொது நுழைவுத் தேர்வு 05.08.2023 அன்று நடைபெறும். 18.08.2023 அன்று முடிவு அறிவிக்கப்படும். நிறுவனத்தின் இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.சேர்க்கைக்கான கலந்தாய்வு கொச்சி, சிஃப்னெட் நிறுவனத்தில் 18.08.2023 நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் ரூ.350 (பொதுப் பிரிவு/ ஓபிசி). 175 (எஸ்சி/எஸ்.டி).
மேலும் விவரங்களை இணையதள முகவரியில் விளக்கக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.