தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் கோவையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
முதலாவதாக பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டனர். பின்னர் சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை, வாலாங்குளம் படகு இல்லம், உக்கடம் குறிச்சி குளம் சீரமைப்பு பணி, புட்டுவிக்கியில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட துணை மின் நிலையம், பச்சாபாளையம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது குழு உறுப்பினர்கள் அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.பெ.கிரி, கோவிந்தசாமி, பிரகாஷ், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் உடன் இருந்தனர்.