விழுப்புரத்தை பூர்விகமாக கொண்டவர் வேலுமணி பரமேஸ்வரி தம்பதியினர். வேலுமணி தன்னுடைய இளமைக் காலத்திலே பணி நிமிர்த்தம் காரணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுவிட்டார். பிற்காலத்தில் தனது மனைவியும் அங்கு அழைத்துச் சென்றவர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும் பெற்று விட்டார். பிரான்ஸ் நாட்டில் இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இளையமகன் அஜித் குமார். பள்ளி படிப்பு எல்லாம் பிரான்ஸ் நாட்டிலே முடித்தவர். மேல் படிப்பிற்காக மேலைநாட்டுக்கு சென்று பட்டப்படிப்பை முடித்து மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பியவர் பிரான்ஸ் அரசின் போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார்.பணியில் சேர்ந்து அஜித்குமார் அவரோடு பணியாற்றிய பல் மருத்துவரான கேன்சா என்கிற பெண்ணோடு நட்பு ஏற்பட்டது. கேன்சாவின் தந்தை அப்தல் அசிஸ் அம்மா ஸ்தோபானி . இருவரின் நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது தொடர்ந்து காதலித்து வந்த அவர்கள் வீட்டில் தங்களுடைய காதலை பற்றி சொல்லி இருக்கிறார்கள். யாரும் ஒத்துக் கொள்ளவில்லை காரணம் இரு நாடு,மொழி,இனம் என பல காரணங்கள் அடுக்கடுக்காக முன் வைக்கப்பட்டது. காதலர்கள் உறுதியாக இருந்தார்கள் ஒரு வழியாக வீடுகளில் பேசி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள செய்த அவர்களுக்கு நாளை விழுப்புரத்தில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற இருக்கிறது.

இது பற்றி அஜித் குமார் கூறுகையில்;
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பிரான்ஸ் நாட்டில் தான். வேலை செய்கிற இடத்தில் கேன்சாவை சந்தித்தேன். எனக்கு மிகவும் பிடித்து போய் இருந்ததால் என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன் அவருக்கும் என்னை பிடித்து விட்டது ஆனால் எங்களுக்கு இருவருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் இரண்டு தரப்பு வீடுகளிலும் இந்த காதலை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதற்காக எவ்வளவு போராடினோம். எனக்காக என்னுடைய அக்கா குடும்பத்தாரிடம் பேசி ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டார். ஆனால் கேன்சாவின் அப்பா இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் ஏற்றுக் கொண்டார் தமிழ் கலாச்சாரமும் பிரான்ஸ் கலாச்சாரமும் இணைவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்காலத்தில் எங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை தமிழ் முறைப்படி வளர்ப்போம் என்று நாங்கள் இருவரும் உறுதியாக இருக்கிறோம் என்றார். கேன்சா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டு வருகிறார் விரைவில் முழுமையாக தமிழ் பேசுவார்.

இது பற்றி கேன்சா கூறுகையில்:
வெவ்வேறு கலாச்சாரம் கொண்டவர்கள் இணைவது என்பது மிகவும் சிரமமான ஒன்று என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். தமிழ் கலாச்சாரம் மொழி ஆகியவை எனக்கு பிடித்தமானதாய் இருக்கிறது. என்னுடைய திருமணத்திற்காக நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் பிரான்ஸ் நாட்டில் இருந்து தமிழ்நாட்டில் வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என தெரிவித்தார்.பிரான்ஸ் நாட்டு பெண்ணை காதலிக்கு திருமணம் செய்து கொண்டாலும் கூட எப்போதும் எங்களுக்கு தாய் நாடு தமிழ் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் குடியேறும் திட்டம் எங்களுக்கு இருக்கிறது என அந்த தம்பதியினர் தெரிவித்தனர். தி நியூஸ் கலெக்ட் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.