- உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 91 ஊழியர்கள் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, முழக்கம் எழுப்பி போரட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/a-case-seeking-an-order-to-repair-the-jetty-bridge-at-choliakudi-sea-in-thondi/
பின்னர், மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணயை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.