பணிப் பெண்ணின் பகீர் வேலை : சப்பாத்தி மாவில் கலந்த ‘அசிங …

The News Collect
2 Min Read
  • உத்திரபிரதேச மாநிலத்தில் உரிமையாளர் திட்டினார் என்பதற்காக சப்பாத்தி மாவில் சிறுநீர் கழித்து ரொட்டி தயாரித்து கொடுத்துள்ளார் பணிப்பெண். உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிக்கி இருக்கிறார் அந்த இளம் பெண்.

இதன் காரணமாக உத்திரப்பிரதேச அரசு, தவறான மற்றும் மத நல்லினக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் எச்சில் துப்புதல் தடைச் சட்டம் 2004, உணவு மாசுபாடு அவசரச் சட்டம் 2024 உள்ளிட்டவற்றை கொண்டு வந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் கடந்த சில நாட்களாக உணவில் எச்சில், சிறுநீர் போன்றவற்றை கலந்து உணவை மாசு படுத்தியதற்காக பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஹாரன்பூரில் இளம் பெண் ஒருவர் ரொட்டியில் எச்சி துப்புவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமில்லாமல் நொய்டாவில் பழச்சாறில் சிறுநீர் கலந்து விற்பனை செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

காசியாபாத்தில் பழச்சாற்றில் எச்சில் துப்பியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார். இப்படி பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்ததால், நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த உணவு பாதுகாப்பை மேம்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் உணவுப் பொருட்களை மாசுபடுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ஒரு ஒட்டு மொத்த குடும்பத்திற்கே சப்பாத்தி மாவில் சிறுநீர் கலந்து ரொட்டி தயாரித்து கொடுத்ததாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரீனா என்ற இளம் பெண் சமையல் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென அந்த குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிட்ட பிறகு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் உள்ள உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது. இதை அடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திடீரென உணவு ஒவ்வாமை ஏற்பட காரணம் என்ன என சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்.

அப்போதுதான் அந்த அதிர்ச்சி தரும் சம்பவம் தெரிய வந்தது. வீட்டில் வேலை பார்க்கும் ரீனா ரொட்டி தயாரிப்பதற்காக சப்பாத்தி மாவில் தண்ணீருக்கு பதிலாக தனது சிறுநீரை கலந்து ரொட்டி தயாரித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரீனாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://www.thenewscollect.com/cant-even-go-to-the-marriage-house-men-are-lamenting-in-ukraine-because-of-their-own-army-what-is-the-reason/

இதற்கிடையில் சம்பளம் கூடுதலாக கேட்டதற்காக வீட்டின் உரிமையாளர் திட்டியதாகவும், இதனால் அவர்களை பழிவாங்க சப்பாத்தி மாவில் சிறுநீர் கலந்து ரொட்டி தயாரித்து கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார் ரீனா. தற்போது ரீனா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Share This Article
Leave a review