- உலகில் முதல் முதலாக 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயக முறையில் தேர்தலை அறிமுகப்படுத்தியவர் மாமன்னன் ராஜராஜ சோழன் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.
செழியன் கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்தார்.சோழர்களின் தலைநகரம் பழையயாறை அருகே பம்பை படையூரில் ராஜராஜ சோழனின் 1039 வதுசதய விழா ராஜராஜன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் இன்று நடைபெற்றது.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்,நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம்,நடிகர் ராஜேஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் முதல் முதலாக ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தியது ராஜ ராஜ சோழன் என்றும் இதற்கு உத்திரமேரூர் கல்வெட்டு சான்று என தெரிவித்தார்.
ராஜராஜ சோழன் வாழ்ந்த பம்ப படையூரில் இந்த விழா நடைபெறுவது ஆகச் சிறந்தது என்றும், இந்த விழா தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் கோவி. செழியன் தெரிவித்தார்.ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழாவினை முன்னிட்டு கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ராஜராஜசோழன் தொடர்பான ஓவிய கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர் . இதில் சிறப்பாக வரையப்பட்ட ஓவியங்களுக்கு அமைச்சர் கோவி. செழியன் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்..
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் ஆன நேற்று கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இரண்டாம் நாளான இன்று காலை கோவில் நிர்வாகம் சார்பாக ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/thanjavur-1039-students-participated-in-various-programs-on-the-occasion-of-1039th-sadaya-festival/
தொடர்ந்து பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாநகராட்சி மேயர் ராமநாதன், தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் பன்னிரு திருமுறை வீதி உலா நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 27 ஆவது தருமை ஆதினம் கூறுகையில்,ஆதீனம் திருமணம் செய்து கொள்வது அவருடைய விருப்பம், அது குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்.
இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் “அருண்மொழிவர்மன்”. இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார்.
இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் செத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராசராச சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.