பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் யார் நடத்த வேண்டுமோ அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 19 அரசு கல்லூரி முதல்வர்கள், 45 அரசு சார்ந்த கல்லூரி என 150 கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு
பொறியியல் கல்லூரியின் முதல் சேர்க்கை 28ஆம் தேதி துவங்கியது.இதில் 22ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.16516 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.15497 பேர் அனுமதி அளித்துள்ளார்கள்.நாளை முதல் கல்விக்கட்டணம் செலுத்தலாம்.ஒதுக்கீடு வாரியாக முதல் கலந்தாய்வில் சேர்ந்துள்ளார்கள்.7.5% ஒதுக்கீட்டில் 1019பேர் சேர்ந்துள்ளனர்.இவர்களையும் சேர்த்து மொத்தம் 16516 பேர் கல்விக்கட்டணம் செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்றார்.

அரசு கலைக்கல்லூரிகளில் 1லட்சத்து 416 பேர் சேர்ந்துள்ள்ளனர.இதில் 45,430பேர் ஆண்கள் மற்றும் 56,007 பேர் பெண்கள் சேர்ந்துள்ளனர்.இது தமிழ்நாடு முதல்வர்கள் அறிவித்த புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்கள் அதிகளவில் அரசு கலை கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
27608அரசு பள்ளியில் படித்து அரசின் உதவி பெறுபவர்கள் என கூறினார்
மேலும் பேசிய அவர்,புதிய கல்விக்கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் கலந்தாய்வு கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிலர் தவிர பொதுப்பாடத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இது கல்லூரிக்கும் ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றார் பொது பாடத்திட்டம் அமல்படுத்த 900 கல்வியாளர்களை அழைத்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கருத்தை கேட்டு தான் இந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கும் பொது பாடத்திட்டம் எதிர்ப்புக்கு, என்னிடம் வந்து நேரடியாக கேட்டால் கூட விளக்கம் தர தயாராக இருக்கிறேன் என்றார்.கல்வி வளர்ச்சிக்காக பயன்படும் என்பது தான் அனைவரின் கருத்தாகவும் உள்ளது. 90 சதவீத கல்லூரிகளில் இந்தப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கல்லூரிகளிலும் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்
ஜனநாய மரபின்படி தான் இப்பொதுபாடத்திட்டம் குறித்து தெரிவித்துள்ளோம் யாரையும்
கட்டாயப்படுத்தவில்லை.பட்டமளிப்பு விழா நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம்.
ஆனால் அதனை யார் நடத்துவார்கள் என்று ஏற்கனவே தெரிவித்தோம் உங்களுக்கும் தெரியும் என தெரிவித்தார்