இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என் அறிவித்து ஐந்து கட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக அரசு தோல்வி பயம் கண்டுள்ளது என்று சொல்லலாம். அதன் வெளிப்பாடாக தற்போது தேர்தல் பரப்பரை கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்படும் என்று பேசியுள்ளார். மதசார்பற்ற நாடாக இந்தியா விளங்கி வரும் நிலையில் ஒரு மதத்திற்கு எதிராக எதிர்க்கட்சி செயல்படும் என்கிற மோடியின் பேச்சு அவருடைய தோல்வி பயத்தை காட்டுகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் கீழவை தற்போது 543 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சிகள் குறைந்தபட்சம் 50% பெரும்பான்மை பெற வேண்டும் அதாவது மக்களவையில் 272 இடங்கள் பெருகிற கட்சியோ, அல்லது கூட்டணி கட்சிகளோ ஆட்சி அமைக்கலாம் என்பது விதி. 400 இடங்களில் நிச்சயம் வெல்வோம் என்று சூலுரைத்த நரேந்திர மோடி கர்நாடகத்தில் கூட்டணி கட்சியால் ஏற்பட்டுள்ள பாலியல் வழக்கு, விவசாயிகள் போராட்டம், பண மதிப்பீட்டு நிலை, தொடர்ந்து பாதிக்கப்படும் சாமானியர்களின் செயல்பாடுகள் என தற்போது தோல்வி பயத்தை நெருங்கி உள்ளார். அதன் விளைவாக என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இங்கு பசுவதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தலைகீழாக தொங்கு விடுவோம் என்று பேசுகிறார் அமித்ஷா இதுவெல்லாம் எதை காட்டுகிறது என்று சொன்னால் பாஜக அரசின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவிற்கு பெரும் செல்வாக்கு இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள் அவர்களின் செல்வாக்கை பெற வேண்டும் என்பதற்காக பல கட்ட பிரச்சாரங்களை நரேந்திர மோடி தொடர்ந்து இந்த மாநிலங்களில் செய்து வந்தார் என்பதையும் எல்லோரும் அறிவார்கள். இந்த நிலையில் கெஜ்ரிவால் கைது, அதன் பின்னர் எம்பி தாக்கப்பட்டார் என்கிற செய்தி இதுவெல்லாம் பாஜகவின் இயலாமையை காட்டுகிறது. அதனால் தான் இப்படி பேசி வருகிறார் நரேந்திர மோடி. பொறுத்திருந்து பார்ப்போம் ஜூன் நான்காம் தேதி யார் முடிசூட்டுகிறார் என்று.