இஸ்லாமியர்கள் இரண்டு வகை பிரிவில் உள்ளனர் ஒன்று ஷியா மற்றோன்று சன்னி பிரிவு இஸ்லாமியர்கள். இந்த இரண்டு பிரிவு இஸ்லாமியர்களும் சில வேறு பட்ட காரணங்களுக்காக மொஹரம் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
மொஹரம் பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர். சன்னி பிரிவினர் எகிப்திய அரசரை வெற்றி கொண்ட நாளாக இந்த திருநாளை கொண்டாடுகின்றனர்.
அப்படி இருக்க, கோவை போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மார்பில் அடித்து கொண்டும், உடலை கத்தியால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட துக்க நாளாக அனுசரித்தனர்.
கோவை போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் மொகரம் பண்டிகையையொட்டி கருப்பு உடை அணிந்தபடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் போரில் கொல்லப்பட்டதை துக்க தினமாக அனுசரித்து ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் பண்டிகை தினத்தில் மார்பில் அடித்து கொண்டும்,உடலில் கத்தியால் கீறிக்கொண்டும் துக்கத்தை வெளிப்படுத்தினர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் படி முதல் மாதமான மொகரம் மாதத்தின் 10 ம் நாள் இமாம் உசேன் மறைவினை நினைவு கூர்ந்து, போத்தனூரில் வசிக்கும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், அரபு மொழியில் துக்க பாடல்கள் பாடி , வழிபாடு நடத்தும் இடத்தில் பஞ்சதத்தன் என்ற கொடி மரத்தில் கருப்பு கொடி ஏற்றி பெண்களும்,
சிறுமிகளும் மார்பில் அடித்துக் கொண்டு அரபு மொழியில் துக்கத்தை வெளிப்படுத்த, ஆண்களும், சிறுவர்களும் கத்தியால் உடலில் கீறிக்கொண்டும், தலையில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டும் துக்கத்தை அனுசரித்தனர்.