சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு
நாளை ராமேஸ்வரத்தில் ”என் மண், என் மக்கள் யாத்திரை” தொடங்க உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். 164 நாட்களில் 234 தொகுதிகள் செல்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஜனவரி மாதத்தில் முடிக்க உள்ளோம்.
யாத்திரை துவக்க விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் வருவார்களா?
சில கட்சித்தலைவர் சார்பாக துவக்கத்தில் வருகிறார்கள் சிலர் அவர்கள் சார்பாக தலைவர்களை அனுப்புகிறார்கள். 234 தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 164 நாட்களில் ஜனவரி 11ஆம் தேதிக்குள் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரையின் மூலம் மோடிஜி அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பொதுமக்களிடம் கொண்டு செல்வது நோக்கம்.
யாத்திரையின் இடையே 10 முக்கிய நகரங்களில் கூட்டம் நடத்த உள்ளோம். அந்தந்த மாநகரங்களில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் மக்கள் பயன் பெற்றார்கள் என்ற அடிப்படையில் அந்த துறை அமைச்சர்களை கொண்டு கூட்டம் நடைபெறும். மாநாடு நடைபெறும் இடங்களில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பார்கள். இராமேஸ்வரத்தில் நாளை மாலை துவக்க விழா, யாத்திரை நாளை மறுநாள் துவங்கும். புள்ளி விவரத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு மோடி செய்தது குறித்து பேச உள்ளோம். 29ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் சட்டமன்ற தொகுதி யாத்திரை துவக்கம்.
NLC குறித்த கேள்விக்கு?
என்எல்சி பகுதியில் விளைநிலங்களில் புல்டோசர் வைத்து சேதப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது.
என்எல்சி பொது மேலாளரிடம் தொடர்பு கொண்டு பேசியதில் நில ஆர்ஜித திட்டத்தின் கீழ் நிலங்களை கையகப்படுத்த சென்றதாக கூறினார். பயிர் சேதமடைந்தால் இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
ஆளுநரை சந்தித்து இரண்டாவது ஊழல் பட்டியல் வழங்கியது குறித்த கேள்விக்கு? மூன்று மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று உள்ளது. விடியல் மெடிக்கல் போன்றவற்றின் மூலம் ஆறு அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இ டி எல் திட்டம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்ட போது 100% அரசு பங்கும் தற்போது ஜீரோ புள்ளி ஐந்து சதவீதம் உள்ளது. ஆறு அமைச்சர்கள் அவர்களது பினாமிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் லோக் ஆயுக்தா உள்ளது, ஆனால் அலுவலர்கள் இல்லை. டி வி சி என்ற அமைப்பு உள்ளது, ஆனால் செயல்படுவதில்லை.
முதல்வரின் யானை பலம் பேச்சுக்கு?
முதல்வர் அவர்கள் எழுதிக் கொடுத்ததை பேசுகிறார். ‘அமைச்சர் பொன்முடி வீட்டில் இ டி ரெய்டின் போது 41 கோடி ரூபாய் அன்னிய முதலீடு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் விளக்கம் அளிப்பாரா? 41 கோடி அந்நிய முதலீட்டில் செல் கம்பெனி உருவாக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது. பிசியில் நிலம் கையகப்படுத்துவது, பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும். அங்குள்ளவர்களுக்கு வேலை மற்றும் இழப்பீடு, ஆகியவை வழங்க வருவாய் துறை மற்றும் என்எல்சி நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கி 14,000 பேருக்கு வேலை வழங்க வேண்டும்.
திருவாரூர் சேந்திரிய பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு, கே.வி பள்ளி உள்ள பகுதிகளில் சுற்று வட்டார வழக்கத்திற்கு ஏற்ப மொழிகள் பயன்படுத்தப்படும் இது குறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதுவதாக அண்ணாமலை கூறினார்.
மணிப்பூரில் 2014 முன்பு இருந்த நிலை வேறு. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏழு மாநிலங்களில் நாம் எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது. ராணுவமே ரோடு போட அங்குள்ள குழுக்களுக்கு பணம் அளித்து, அதன் பின் தான் சாலை அமைக்க முடியும். பேச்சுவார்த்தை முடித்து தான் அங்கு செல்ல முடியும்.
ஆயுதப்படை சிறப்பு சட்டங்கள் முன்பு இருந்தது தற்போது அந்த மாநில உரிமைக்காக ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
மற்றும் கலவரம் குறித்து உள்துறை மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் அவர் கூறினார்.