உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் பந்தய சாலையில் உள்ள மீடியா டவரில் இருந்து மாசாணிக் மருத்துவமனை வரை செவிலியர்கள் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
“என் தாயின் உதிரம் என் உயிரை காக்கும் ஆயுதம்”, “என் தாய் கொடுக்கும் பாலுக்கு இந்த பிரபஞ்சமே அடிமை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பின்னர் பேசிய காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்மார்கள்
பாலூட்டும் முக்கியவத்தை உணரக்கூடிய வகையில் குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு தாய்ப்பால் மிகவும் உதவியாக இருக்கிறது. மாசாணி மருத்துவமனை மற்றும் இன்னர் வீல் கிளப் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த பேரணி கலந்து கொண்டனர்.
தாய்ப்பால் ஊட்டுவதின் முக்கியத்தை எடுத்து சொல்லக் கூடிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாய்ப்பால் தேவை உள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கக்கூடிய தாய்மார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த பேரணி அமைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் கெட்டு விடக்கூடாது என்பதை பேணி காப்பதற்கு குளிர்சாதன வசதி மருத்துவமனை வழங்குகின்றனர். கோவை மாநகரில் பாலூட்டுவதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் காவல்துறையில் உள்ள தாய்மார்கள் பெண் காவலர்கள் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படும் என தெரிவித்தார்.