- காரல் மார்க்ஸ்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜூலை 26 அன்று, நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒப்புக்கொண்டார், மக்களவை விதிகளின்படி 50 க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் இதில் கலந்து கொண்டனர் .
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா, திமுகவின் டிஆர் பாலு, என்சிபி தலைவர் சுப்ரியா சூலே உள்ளிட்ட காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஐ(எம்), சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ஜேடி(யு), ஆம் ஆத்மி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இதில் பங்கு கொண்டனர் .
முன்னதாக மக்களவையில் மோடி அரசுக்கு எதிரான முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 20, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்டது. மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் நம்பிக்கையில்லாத தீர்மானம் ?
மே மாதம் மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தே குழுவிற்கும் பழங்குடியின குக்கி சிறுபான்மையினருக்கும் இடையே ஏற்பட்ட இன மோதல்கள் குறித்து அவர் பாராளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
வன்முறையில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம், இரண்டு பெண்களை ஒரு கும்பல் மனபங்கப்படுத்தி நிர்வாணமாக அழைத்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், மணிப்பூர் பிரச்சினையில் விவாதத்தை தொடங்குவதற்கும் , பாஜக அரசை நிர்பந்திப்பதற்கும் நம்பிக்கையில்லாத தீர்மானம் ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்றுமுடிவு செய்யப்பட்டது.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதற்கு முன், நாடாளுமன்றத்தில் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன, இந்தக் கோரிக்கையை மோடி தலைமையிலான பாஜக அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
எனினும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .
மோடி அரசுக்கு எதிரான ரெண்டாவது தீர்மானம் இது !
2018 இல் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 325 எம்பிக்கள் வாக்களத்தினர் , மேலும் தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேர் மட்டுமே ஆதரவு அளித்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்றது.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருப்பதையே நம்பிக்கையில்லா தீர்மானம் குறிக்கிறது. ஆளும் அரசாங்கத்தின் பெரும்பான்மை மற்றும் ஆட்சி செய்யும் திறனை எதிர்கட்சிகள் சவால் செய்ய இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அனுமதிக்கிறது, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும்.
மக்களவையின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 198 நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைப்பதற்கான நடைமுறையை குறிப்பிடுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும், அதன்படி சபாநாயகர் தீர்மானம் விவாதத்திற்கான தேதியை அறிவிப்பார்.
ஒதுக்கப்பட்ட தேதி, தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் இருக்க வேண்டும்.
இதற்குமுன்பு கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத தீர்மங்கள் …
மக்களவையில் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் ஜவஹர்லால் நேரு அரசுக்கு எதிராக ஆச்சார்யா ஜேபி கிருபாலானியால் 1963 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஒரு வருடம் கழித்து, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு எதிராக அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த 16 ஆண்டு காலத்தில் அவருக்கு எதிராக மொத்தம் 15 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன, இதுதான் மக்களவை வரலாற்றில் ஒரு பிரதமர் அதிகப்படியாக எதிர்கொண்ட நம்பிக்கை இல்லாத தீர்மானம் ஆகும் .
லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பிவி நரசிம்ம ராவ் இருவரும் தலா மூன்று நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டனர், மொரார்ஜி தேசாய் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் தலா இரண்டு தீர்மானங்களை எதிர்கொண்டனர் . ராஜீவ் காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் தலா ஒரு தீர்மானத்தை எதிர்கொண்டனர்.
இருப்பினும், இந்திய மக்களவை வரலாற்றில் இதுவரை, கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்களில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டதால், அது ஒரு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அந்தத் தீர்மானம் 1979 இல் காங்கிரஸின் ஒய்.பி.சவானால் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு எதிராக முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .