தொடர் சொதப்பல்.! அடுத்த ஆள் தயார்.! சுப்மென் கில்லுக்கு நெருக்கடி.!

0
107
சுப்மென் கில்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் மூன்று மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர் சுப்மன் கில் ஃபார்ம் அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடி அதிக ரன்களை சேர்த்த வீரர் என்ற பெருமையை நடந்து முடிந்த சீசனில் கில் படைத்திருந்தார்.

அவருடைய ஆட்டம் எல்லாம் பார்த்து இவர் தாண்டா அடுத்த விராட் கோலி என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். ஆனால் அதன் பிறகு கில் ஒரு இன்னிங்ஸில் கூட 30 ரன்கள் தொடவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 மற்றும் 18 ரன்களும்,வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆறு ரன்களும் இரண்டாவது டெஸ்டில் 10 மற்றும் 29 ரன்களும் எடுத்திருந்தார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கில் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதனால் கில் மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் இஷான் கிஷனுக்கு தொடக்க வீரராக கடந்த போட்டியில் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார். அதனை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அரை சதம் அடித்தார். மேலும் இசான் கிஷன் விக்கெட் கீப்பர் என்பதால் அவர் தொடக்க வீரராகவும் களமிறங்கினால் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற் பந்து வீச்சாளர் அல்லது பேட்ஸ்மேன் ஆகியோரை சேர்க்கலாம்.

இதனால் கில் தொடர்ந்து சொதப்பி வந்தால் அந்த இடத்தில் இஷான் கிஷன் கூட விளையாட வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கில் பல்வேறு சாதனைகளை ஏற்கனவே படைத்திருப்பதால் இது சிறிய சரிவாக தான் இருக்கும் என்றும் அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் எனும் எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகளில் கில் தன்னுடைய ஃபார்மில் நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இலையேனில் கில் பதில் வேறு வீரரை மாற்றவும் இந்திய அணி தயங்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here