பழம் பெரும் பாரம்பரியத்துடன் புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350-ன் 2023 மாடல் அறிமுகம்…

0
202
ராயல் என்பீல்டு

ஒரகடம் அருகே வல்லம் சிப்காட்டிலுள்ள ராயல் என்பீல்டு தொழிற்சாலையில் ராயல் என்பீல்டு தலைமை செயல் அதிகாரி கோவிந்தராஜன் புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350-ன் 2023 மாடலை அறிமுகப்படுத்தினார்…!!!

1932ம் ஆண்டின் பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வந்துள்ள 2023ம் புல்லட் 350.ஜே-மாடல் என்ஜினைக் கொண்டுள்ள இந்த புல்லட் பழைய கால நினைவுகளுடன் தற்போதைய நவீன கால இளைஞர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன வரலாற்றில் அனைவரது மனதிலும் நீடித்து நிலைத்து நிற்கும் பெயராக அன்று முதல் இன்று வரை ராயல் என்பீல்டு புல்லட் 350 இருந்து வருகிறது. நடுத்தர அளவிலான (250சிசி-–750சிசி) மோட்டார் சைக்கிள் பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய அவதாரத்தில் அதன் பழம் பெரும் பாரம்பரியத்துடன் புதிய 2023 புல்லட் 350 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வல்லம் சிப்காட்டிலுள்ள ராயல் என்பீல்டு தொழிற்சாலையில் ராயல் என்பீல்டு தலைமை செயல் அதிகாரி கோவிந்தராஜன் இந்த புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350-ன் 2023 மாடலை அறிமுகப்படுத்தினார்.

சிறப்பான செயல்திறன் மற்றும் கம்பீரமான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது புதிய ‘ஹார்ட்’ உடன் அதே ‘பீட்’ உடன் மறுவரையறை செய்யப்பட்ட ஜே–மாடல் என்ஜினுடன் இந்த மோட்டார் சைக்கிளை தற்போது அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக 2023–ம் ஆண்டில் புதிய அவதாரம் எடுத்துள்ள இந்த புல்லட் 350 ஈடு இணையில்லாத 1932–ம் ஆண்டின் பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருகிறது

அதேபோல் ஜே-மாடல் என்ஜினைக் கொண்டுள்ள இந்த புல்லட் பழைய கால நினைவுகளுடன் தற்போதைய நவீன கால இளைஞர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய புல்லட் 350,உலகளவில் பாராட்டப்பட்ட 349சிசி ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது,

ரூ1,73,562/- முதல் மீயடர், கிளாசிக் மற்றும் ஹண்டர் என மூன்று வெவ்வேறு மாடல்களில் ஐந்து வண்ணங்களில் இந்த புதிய 2023ம் புல்லட் 350 கிடைக்கிறது.

இந்த புதிய 2023 புல்லட் 350 அறிமுகம் குறித்து ராயல் என்பீல்டு தலைமை செயல் அதிகாரி கோவிந்தராஜன் கூறுகையில், 90 ஆண்டுகளுக்கும் மேலாக துணிச்சல்மிக்கவர்களுக்கு, துணிச்சலான கூட்டாளியாகவும்,மூன்று தலைமுறை கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட புல்லட் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.‌‌இதன் பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்ள நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, ஒரு புதிய வடிவம் மற்றும் அவதாரத்திற்கு மாறத் தயாராகியும், ஒரு நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பாலும் உறுதியுடன் தனது பயணத்தை ராயல் என்பீல்டு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here