பாரம்பரிய கைவினைத் தொழிலில் தனிநபர்கள் பயனடையும் வகையில் புதிய திட்டம் – பிரதமர் அறிவிப்பு

0
127
பொற்கொல்லர்கள்

77-வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாட்களில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்னும் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். பாரம்பரிய கைவினைக் கலையில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

“வரும் நாட்களில், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பாரம்பரிய கைவினையில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள், குறிப்பாக ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடையும் ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்குவோம். சுமார் 13-15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடங்கும் இத்திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது  குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்” என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி

முன்னதாக, மோடி தமது உரையில், அரசின் வறுமை ஒழிப்பு முயற்சிகள் குறித்து பேசினார். முதல் ஐந்தாண்டு காலத்தில் இந்த முயற்சிகளின் விளைவாக, 13.5 கோடி ஏழை மக்களும் பெண்களும் வறுமையின் சங்கிலிகளிலிருந்து விடுபட்டு புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்த 13.5 கோடி மக்களும் வறுமையின் கஷ்டங்களிலிருந்து மீள உதவிய பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமர் பேசினார். பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ .50,000 கோடி வழங்குவது மற்றும் பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம் விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக ரூ .2.5 லட்சம் கோடியை டெபாசிட் செய்வது ஆகியவை இதில் முக்கியமானவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here