- கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 3 பேரை கோவைக்கு அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை (NIA) அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில்
கடந்த மாதம் 21 ஆம் தேதி போத்தனூரைச் சேர்ந்த அபு ஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன், ஜிஎம் நகரைச் சேர்ந்த பவாஸ் ரஹ்மான் ஆகிய 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னை புழல் சிறையில் இருத்து காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை விசாரணைக்காக கோவை அழைத்து வந்துள்ளனர்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்ஐஏ – முகாம் அலுவலகத்துக்கு இன்று காலை அழைத்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையின் பல்வேறு இடங்களுக்கு 3 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/the-pager-and-walkie-talkies-used-by-hizbullah-in-lebanon-suddenly-exploded-killing-40-people-israel-openly-admitted/